இந்தியாவில், கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பைக் தீண்ட வைத்து கொலை செய்த மருமகள் மற்றும் அவரின் காதலரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா, ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் இராணுவத்தில் பணியாற்ற, மனைவி தனது மாமியார் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். பொலிஸார் கூறும் தகவல்களின் படி, மருமகளுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்துள்ளது.

தொடர்ந்து அந்த நபரும் மருமகள் தொலைபேசியிர் பேசிக்கொண்டிருப்பதை மாமியார் கண்டித்துள்ளார். இதனால், தனது மாமியாரை கொலை செய்ய தீர்மானித்த மருமகள், அவரின் காதலரின் அனுமதியுடன் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பாம்பை தீண்ட வைத்து கொலை செய்தால், , யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், அதனை நிறைவேற்றியுள்ளனர்

ஆனால், அக்கம்பக்கத்தினர் குறித்த யுவதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூற, பொலிஸார் விசாரணை நடத்தி மருமகள் மற்றும் அவரின் காதலரை கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது. 

குறித்த இச்சம்பவம் அப்பகுதியினரை பெரிதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.