ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷ, இன்று முற்பகல் கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

முற்பகல் 10 மணியளவில் தலதா மாளிகைக்குச் சென்றுள்ள கோத்தாவை பஸநாயக்க நிலமே பிரதீப் நிலங்கவினால் வரவேற்கப்பட்டுள்ளார்.

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.