அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீ அந்நாட்டில் பெரும் உயிர் சேத்தையும் பொருட் சேதத்தையும் விளைவித்து கொண்டிருக்கின்றது. 

தீயின் கொடூரத்தால் தமது உடைமைகளை முழுவதுமாக இழந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நிலை குழைந்து நின்ற ஒரு அவுஸ்திரேலியருக்கு  மீண்டும் தன்னம்பிக்கையுடன் வாழ்வை ஆரம்பிக்க அவரது அதிஷ்டம் கைகொடுத்துள்ளது. 

நியூ சவுத் வேல்ஸில் உள்ள மவுண்ட் காட்டன் நகரைச் சேர்ந்த அவுஸ்திரேலியர் எடுத்த அதிஷ்ட இலாபச்  சீட்டுக்கு 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்  (இலங்கை ரூபா 16,444,627,251.00) பணப்பரிசாக கிடைத்துள்ளது.

இதனையடுத்து பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ள அவுஸ்திரேலியர்  "இது ஒரு அதிசயம்!"  "நாங்கள் எப்போதாவது மீண்டும் வீட்டை கட்டுவோமா என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் இப்போது எங்களால் நிச்சயமாக முடியும்"   என தமது பரிசை பெற்று கொண்ட போது கூறியுள்ளார். 

அந்த நபருக்கு ஜாக்பாட்  தொகை கிடைக்கச்செய்யத எண்கள் 9, 42, 24, 13, 22 , 11, 26 மற்றும் 1 ஆகும். தனது மனைவியின் விருப்பத்தின் காரணமாகவே இந்த  எண்களைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.