பௌர்ணமி தினத்தான நேற்று  தலவாகலை நகரில் சட்டவிரோதமான முறையில் அதிகூடிய விலையில் மதுபானம் விற்பனை செய்த  சந்தேகநபர் ஒருவரை தளவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .

தலவாகக்லை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 06 மதுபான போத்தல்களும் 43 சிறிய மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபருக்கு தலவாக்கலை பொலிஸாரினால் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.