தை பி­றந்தால் வழி­ பி­றக்கும் என்­பது தமிழர் நம்­பிக்கை. அது­போல தை ­பி­றப்­புடன் பெருந்­தோட்ட மக்­களின் சம்­பள விட­யத்தில்  நல்ல செய்தி கிட்டும் என சமூக வலு­வூட்டல் மற்றும் பெருந்­தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சர் ஆறு­முகன் தொண்­டமான் தெரி­வித்தார். 

கண்டி மகாவலி ரீச் ஹோட்­டலில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் தெரி­வித்­ததா­வது;-

புதிய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ சொன்­னதைச் செய்­பவர். எனவே அவ­ரிடம் எமது சமூகம் தொடர்பில் சில கோரிக்­கைளை முன்­வைத்­துள்ளோம். அதில் முக்­கி­ய­மாக பெருந்­தோட்டப் பகு­தியில் மது பாவ­னையைக் கட்­டுப்­ப­டுத்தும் வகையில் சாராயத் தவ­ற­ணை­களைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்தல், தோட்டப் பாட­சா­லை­களில் நில­வும் கணித, விஞ்­ஞான பாட ஆசி­ரியர் பற்­றாக்­குறை பிரச்­சி­னையைத் தீர்த்தல், மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் வைத்திய சேவையை விருத்தி செய்­யும் வகையில் தாதியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர கிரா­மத்­துக்கு ஒரு வீட்டுத் திட்டம் என்ற அடிப்­ப­டையில் கிரா­மங்கள் தோறும் வீட்­டுத்­திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. அதனை தோட்­டங்­க­ளுக்கும் விஸ்­த­ரிக்­கும்­படி வேண்­டுகோள் விடுத்­துள்ளோம்.

எமக்கு அடுத்த பொதுத் தேர்­தலில் சின் னம் ஒரு பிரச்­சி­னை­யல்ல. சேவல் சின்னம், தாமரை மொட்டுச் சின்னம், நாற்­காலி சின்னம் என எதுவானாலும் நாம் ஜனா­தி­ப­தி­யுடன் கூடவே இருப்போம். எமது ஆத­ரவு என்றும் அவ­ருக்கே வழங்­கப்­படும்.

பெருந்­தோட்டக் காணி­களை ஏ.பீ.சீ. என்று தரப்­ப­டுத்தி சீ தரத்தை தோட்டத் தொழி­லா­ள­ருக்கு வழங்கும் ஒரு திட்டம் உள்ளது. சீ தரம் என்­பது பயன்­ப­டுத்த முடி­யாத கற்­பா­றைகள் கொண்ட பகு­தி­யாகும்.  அதனை மாற்­றும்­ப­டியும் அரசை வேண்­டி­யுள்ளோம். 

சிறு­பான்­மையினருக்கு பாதகம் ஏற்­படும் எந்த ஒரு விட­யத்­தையும் நாம் எதிர்ப்போம். விஜே­தாச ராஜ­பக்­ ஷ கொண்டு வந்த சட்­மூ­ல­மா­னாலும் சரி வேறு சட்­டங்­க­ளா­னாலும் சரி அவை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாத­க­மாக இருக்­கு­மாயின் நாம் எதிர்ப்புத் தெரி­விக்க பின்னிற்க மாட்டோம். ஆனால் ஜனா­தி­பதி முறையே சிறு­பான்­மைக்கு சாத­க­மாக உள்­ளது. எனவே ஜனா­தி­ப­திக்கு அதி­கா­ரங்களை அதி­க­ரிப்­பது நல்­லது. இதில் 19, 20 எமக்கு பிரச்­சினை அல்ல. எமது மக்­க­ளுக்கு எது நன்­மை ­தரும் என்­பதே நோக்­கப்­படும். இன்று சில அர­சியல் வாதி­களின் செயற்­பா­டு­களே தோட்டத் தொழி­லா­ளர்கள் நிம்­மதி இழந்து வாழக் கார­ண­மாகும். ஆகவே இனி­வரும் காலங்­க­ளி­லா­வது சுய­ந­ல ­போக்­கு­டைய அர­சியல் வாதிகள் தங்­க­ளது பிழை­களைத் திருத்திக் கொள்ள வேண்டும். 

ஆட்சி அதி­கா­ரத்தைத் தீர்­மா­னிக்கும் விட­யத்தில் அன்றும் இன்றும் இ.தொ.கா. தான் முக்­கிய பங்­காற்­று­கி­றது. இ.தொ.கா.வின் உதவி இன்றி ஆட்சி அமைக்க முடி­யாது. நுவ­ரெ­லியா மாவட்­டத்திலுள்ள 11 பிர­தேச சபை­களில் 10 சபை­களின் அதி­காரம் எமது கையில் உள்­ளது. இ.தொ.கா. வானது ஒரு தேர்தலில் நாட்டில் எல்லாப் பகு­தி­க­ளிலும் போட்­டி­யிடக் கூடிய சக்தி உடை­யது. ஆனால் எம்மை எதிர்ப்­ப­வர்கள் ஒரு சிறிய பரப்பில் மட்­டுமே வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் மேற்சொன்ன சபைகளில் ஒன்றையேனும் கைப்பற்றவில்லை. நாடளாவிய ரீதியில் போட்டியிடும் திறன் அவர்களுக்கு இல்லை. எனவே ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி எம்மிடம்தான் உள்ளதென்பதை எதிர்த் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.