பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­க­வுக்கு தானும் தொலை­பேசி அழைப்­பு­களை கடந்த காலங்­களில் மேற் ­கொண்­ட­தாக பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

நேற்­று­முன்­தினம் கொழும்பில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த போதே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

"பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்க தொலை­பேசி அழைப்­புகளை மேற்­கொண்டு அதன் ஒலிப்­ப­திவு வெளி­யாகி சர்ச்­சை­யா­கி­யுள்­ளது. நானும் கடந்த காலங்­களில் ரஞ்­ச­னுக்கு தொலை­பேசி அழைப்­பு­களை மேற்­கொண்­டி­ருந்தேன். அவ­ருக்கு பிறந்­தநாள் வாழ்த்­து­க்களை சொல்­லவே நான் அவ்­வாறு அழைப்­பு­களை எடுத்­தி­ருந்தேன்.எனவே நான் மேற்­கொண்ட அழைப்­புகள் குறித்து யோசிக்க வேண்­டிய அவ­சியம் எனக்­கில்லை." என்று நகைச்சுவையாக செய்தியாளர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.