லொரியுடன் மோதி பற்றி எரிந்த பயணிகள் பஸ்:  20 பேர் பலி 

11 Jan, 2020 | 10:57 AM
image

உத்தர பிரதேசத்தின் கன்னூஜ் மாவட்டத்தில் பயணிகள் சொகுசு பஸ் ஒன்று லொரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில்  20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) 45 பயணிகளுடன் ஜெய்ப்பூர் நோக்கிச்  சென்று கொண்டிருந்த பயணிகள் சொகு பஸ்ஸூடன் கன்னூஜ் மாவட்டம், சிப்பராமு என்ற இடத்திற்கு அருகே  லொரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இரு வாகனங்களும் தீபற்றியுள்ளன. இதன் காரணமாக பஸ்ஸில் பயணித்த 25 பயணிகள் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் பஸ்ஸிற்குள் சிக்கியமையால், அவர்கள் தீயில் கருகி இறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளது. 

தீயில் கருகிய  உடல்களை அடையாளம் காணுவதற்காக, உடல்களை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மீட்கப்பட்ட பயணிகளில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும்  தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் நான்கு தீயணைப்பு இயந்திரங்களின் உதவியுடன்  40 நிமிடங்கள் போராடி தீ கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய...

2024-04-12 21:26:07
news-image

100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ்...

2024-04-12 20:28:07
news-image

மறு அறிவிப்பு வரும் வரை ஈரான்...

2024-04-12 19:37:59
news-image

இன்று அல்லது நாளை இஸ்ரேலின் தென்பகுதி...

2024-04-12 16:50:03
news-image

இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ளும் எண்ணத்தை...

2024-04-12 11:07:27
news-image

கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேட்பதா?”...

2024-04-12 08:55:18
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளலாம்...

2024-04-12 08:39:30
news-image

தென்கொரிய பொதுத்தேர்தல் - ஆளும் கட்சி...

2024-04-11 12:20:12
news-image

ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட...

2024-04-11 11:37:34
news-image

'கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்?' - திக்விஜய்...

2024-04-11 10:00:15
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் புதல்வர்கள்...

2024-04-10 21:52:35
news-image

கச்சதீவை இலங்கைக்கு திமுகவும் காங்கிரஸ் கட்சியும்...

2024-04-10 14:15:01