நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படும் - மஸ்தான் எம்.பி

Published By: Daya

11 Jan, 2020 | 10:49 AM
image

நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான நிதிகளை வழங்குவதற்கான வேலை திட்டங்களை மேற்கொண்டுவருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

முன்னைய அரசால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட செயற்பாடுகள் தற்போது நிறுத்தப் பட்டுள்ளமை தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வீடமைப்பு திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்புடைய அமைச்சருடன் இடம்பெற்று வருகிறது. உண்மையில் கடந்த அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் இல்லாத செயற்பாடுகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். 

இருந்த வீட்டினையும் உடைத்து தற்போது மழை வந்தால் கூட ஒதுங்க முடியாத நிலையிலுள்ளனர். தேர்தலில் வாக்கு பெறுவதற்காக இந்த விடயத்தில்  மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனினும் அரசாங்கம் என்ற வகையில் அவர்களிற்கான நிதிகளை விரைவாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.  

வன்னி மாவட்டங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வரவுசெலவு திட்டத்திற்குள் சமர்ப்பிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். எமது பகுதிகளிலுள்ள தேவைப்பாடுகள் எண்ணில் அடங்காதவையாக இருக்கிறது.

அவற்றில் எவ்வளவிற்குப் பூர்த்தி செய்ய முடியுமோ அதனை இந்த அரசினூடாக பூர்த்தி செய்வதற்கு முயற்சி செய்து வருகிறேன்.குறிப்பாக புனர்வாழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களது வாழ்வாதாரம் மிகவும் கீழிறங்கியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு  வரையறையில்லாத வகையிலும் யாரிடமும் எதிர்பார்க்காத வகையிலுமான ஒரு நிலைமையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37