குரல் பதி­வு­க­ள் அனைத்தையும் இணை­யத்தில் வெளி­யி­டுங்கள்: ரஞ்சன் எம்.பி.யிடம் ஹெல உறு­மய கோரிக்கை

Published By: J.G.Stephan

11 Jan, 2020 | 10:19 AM
image

பதிவு செய்­யப்­பட்­டுள்ள அனைத்து குரல் பதி­வு­க­ளையும் இணை­யத்தில் வெளி­யி­டு­மாறு ரஞ்சன் ராம­நா­யக்­க­விடம் ஜாதிக ஹெல உறு­மய  கோரிக்கை விடுத்­துள்­ளது. 

பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள ஜாதிக ஹெல உறு­மய கட்சித் தலை­மை­ய­கத்தில் கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. 



இதன்போது  ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊடகப் பேச்­சாளர் நிசாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க குறிப்­பி­டு­கையில், 

வெளி­யா­கி­யுள்ள குரல் பதி­வு­களில் பல்­வேறு தரப்­பினர் சம்­பந்­தப்­பட்­டுள்­ளதை மக்கள் தற்­போது அறிந்து கொண்­டுள்­ளனர். எனவே அதனை யாரும் சுய அர­சியல் நலன்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தாமல் இருக்க வேண்­டு­மாயின் அனைத்து குரல் பதி­வு­க­ளையும் மக்­க­ளுக்கு அறி­யப்­ப­டுத்­த வேண்டும். 

அவ்­வாறு இல்­லை­யென்றால் வரு­டக்­க­ணக்­கில் ­பல சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் பதிவு செய்த குரல் பதி­வுகள் பய­னற்றுப் போய் விடும். 

மறுபுறம் ரஞ்சன் ராம­நா­யக்­கவின்  ஒரு இலட்சத்து 21ஆயிரத்துக்கும் அதி­க­மாக குரல் பதி­வுகள் வேறு தரப்­பு­க­ளுக்கு கிடைக்கப் பெற்றால் அதனை தவ­றாக பயன்­ப­டுத்­து­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.  எனவே இந்த விட­யத்தில் அவர் உரிய வகையில் செயற்­பட வேண்டும்.

மேலும் சமூ­கத்தை சீர­ழிக்கும் பல்­வேறு குரல்­ப­தி­வுகள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்ற நிலை­யிலும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு மதகுருமார்கள் தடை விதிக்க கோராமல் இருப்பது சிந்திக்கத்தக்க விடயமாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22