பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பள்ளிவாசலில் தொழுகையின் போது இடம்பெற்ற  தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன்  19 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரம் குவெட்டாவில் இடம்பெற்றுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேர தொழுகைகளில் கலந்து கொண்டிருந்த ஒருவர் சம்பவம் தொடர்பில் கூறுகையில்,

பள்ளிவாசலில் மீது தாக்குதல் நடந்த நேரத்தில் சுமார் 60 பேர் இருந்தனர். பள்ளிவாசலில் தொழுகை ஆரம்பமாகிய சில நொடிகளில் தொழுகையில் ஈடுபட்டவர்களின் முன் வரிசையில் குறித்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது  என தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ளதை குவெட்டாவின் சாண்டேமன் வைத்தியசாலை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு மூன்று முதல் நான்கு பேரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.