(ரொபட் அன்­டனி)

இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான  உறவை மேலும் வலுப்­ப­டுத்­து­வது குறித்தே  இந்­தியத் தலை­வர்­க­ளு­டனான எனது சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.  சந்­திப்­புகள் ஆக்­க­பூர்­வ­மாக அமைந்­தன என்று  இந்­தியா சென்­றுள்ள வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். 

தேசிய பிரச்­சி­னைக்­கான அதி­காரப் பகிர்வு விவ­காரம் தொடர்பில் எதுவும் பேசப்­ப­ட­வில்லை. எனது சந்­திப்­புகள் வெளிவி­வ­கார அமைச்சு  மட்­டத்­தி­லேயே காணப்­பட்­டன என்றும்  வெளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன  இந்­தி­யா­வி­லி­ருந்­த­வாறு  கேச­ரிக்கு குறிப்­பிட்டார்.  

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை  மேற்­கொண்டு இந்­தியா சென்­றுள்ள வெ ளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன அங்கு அந்­நாட்டு வெ ளிவி­வ­கார அமைச்சர் ஜெய்­சங்கர் மற்றும் வெ ளியு­றவு செயலர்  கோக்லே  உள்­ளிட்ட பல தலை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.  

இதன்­போது இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான மீனவர் பிரச்­சினை பட­குகள் விடு­விப்பு விவ­காரம் போன்ற பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டி­ருந்­தது. 

அந்த சந்­திப்­புக்கள் குறித்து கேட்­ட­போதே   அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன இந்­தி­யா­வி­லி­ருந்­த­வாறு   மேற்­கண்ட விட­யங்­களை கூறினார். 

அமைச்சர்  மேலும் குறிப்­பி­டு­கையில், இந்­தி­யாவின் வெ ளிவி­வ­கார அமைச்சர் ஜெய்­சங்கர் மற்றும் வெ ளியு­றவு செயலர்  கோக்லே  உள்­ளிட்ட பலரை சந்­தித்து பேச்சு நடத்­தினேன்.  தற்­போது கூட (நேற்று முற்­பகல்) இந்­திய வர்த்­தக சபையின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்சு நடத்­தினேன். 

இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது பல்­வேறு விட­யங்கள் குறித்து  ஆரா­யப்­பட்­டது.  மிக முக்­கி­ய­மாக இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் தற்­போது காணப்­படும்  நெருக்­க­மான  உறவை மேலும் வலுப்­ப­டுத்­து­வது  தொடர்பில் இதன்­போது ஆரா­யப்­பட்­டது.    இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான உறவை வலுப்­ப­டுத்த வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.  இரண்டு நாடு­களும்  அத­னையே விரும்­பு­கின்­றன. 

அதன்­படி  இந்­திய பிர­தி­நி­தி­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தைகள் சந்­திப்­புக்கள் மற்றும் கலந்­து­ரை­யா­டல்கள் ஆக்­க­பூர்­வ­மாக அமைந்­தன. 

கேள்வி அர­சியல் தீர்வு குறித்து ஏதா­வது பேசப்­பட்­டதா? 

பதில் இல்லை.  அதி­காரப் பகிர்வு குறித்து எதுவும் பேசப்­ப­ட­வில்லை.    எனது சந்­திப்­புக்கள் மற்றும் கலந்­து­ரை­யா­டல்கள் எல்லாம்   வெ ளிவி­வ­கார அமைச்­சுக்­கு­ரிய  விட­ய­தா­னங்கள் பற்­றியே  காணப்­பட்­டன. அந்த விட­யங்கள் குறித்தே   கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அந்த பேச்­சு­வார்த்­தைகள்  ஆரோக்­கி­ய­மாக இருந்­தன. சந்­திப்­புக்கள்  வெற்­றி­க­ர­மாக அமைந்­தன.

கேள்வி  இந்­திய பிர­த­மரை சந்­திப்­பீர்­களா? 

பதில் இல்லை.  எனது இந்த விஜ­யத்­தின்­போது  இந்­திய பிர­த­மரை சந்­திக்­க­வில்லை  என்றார். 

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலை­மையில் புதிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்ட பின்னர்  வெ ளிவி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன மேற்­கொள்ளும் முத­லா­வது வெ ளிநாட்டு விஜ­ய­மாக இந்த இந்­திய விஜயம் அமைந்­துள்­ளது. 

கடந்த நவம்பர் மாத இறு­தியில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ முத­லா­வது வெ ளிநாட்டு விஜ­ய­மாக இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை  மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இதே­வேளை  அமைச்­சரின் இந்­திய விஜயம் குறித்து  வெளி­வி­வ­கார அமைச்சு  விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது 

இந்­திய வெ ளிவி­வ­கார அமைச்­சரின் அழைப்பின் பேரில்  இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்த   அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன வெ ளிவி­வ­கார அமைச்சர்  ஜெய் சங்கர் வெ ளிவி­வ­கார செயலர் கோக்லே  மற்றும் திறன் அபி­வி­ருத்தி அமைச்சர்   தொழில்­வாய்ப்பு அமைச்சர் உள்­ளிட்ட பலரை சந்­தித்து பேச்சு நடத்­தினார். 

இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான பல்­வேறு முக்­கிய விட­யங்கள் குறித்து பேச்சு நடத்­தப்­பட்­டது. 

முத­லீடு பாது­காப்பு  மீனவர் விவ­காரம் இலங்­கையில் இந்­தி­யா­வினால் முன்­னெ­டுக்­கப்­படும்  அபி­வி­ருத்தி திட்­டங்கள்   சுற்­று­லாத்­துறை கல்வி கலா­சார ஒத்­து­ழைப்பு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து   இதன்­போது பேசப்­பட்­டது.   சர்­வ­தேச மட்­டத்தில் தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலை குறித்தும் இதன்போது     பேசப்பட்டது. 

அத்துடன் வெ ளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன  இந்திய வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.  இதன்போது இந்திய தரப்பினரால் இலங்கையில் முன்னெடுக்கப்படக்கூடிய  முதலீடுகள்  தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. 

இந்திய வர்த்தக சம்மேளனத்தின்  பிரதிநிதிகள் குழுவை இலஙகைக்கு விஜயம் செய்யுமாறும்   இதன்போது   அமைச்சர் தினேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.