ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின்  சிந்தனையில்  உதித்த நாட்டை அழகு படுத்தல் எனும் தேசிய திட்டத்தின் கீழ் தீவு முழுவதும் சுவரோவியம் வரையும் நிகழ்வுகளானது நடந்தேறி வருகின்றது.

இவ்வாறு அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கல்முனை பிராந்திய ஆரம்ப நிகழ்வு முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை  சாய்ந்தமருது கல்வி கோட்ட கமு/கமு  அல்-கமறூன் வித்தியாலய முன் பிரதான வீதியில் இடம்பெற்றது.

குறித்த ஓவியங்களின் கருப்பொருளாக  கடற்பாதுகாப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வு ஆகியன தொடர்பானதாகும்.

இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை  மாநகர சபை உறுப்பினர் ஏ. எம். றியாஸ்,  கல்முனை கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் வி.ஜிஹானா ஆலிப், ஆசிரிய ஆலோசகர் ஏ.கே பத்திரன மற்றும் கமு/கமு/அல்-கமறூன் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு இவ் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.