டெங்­கு­நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருக்கும் தடுப்­பூசி மருந்தை பிரான்­சி­லி­ருந்து தரு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சபையில் தெரி­வித்த சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரட்ன எதிர்­வரும் இரண்டு அல்­லது மூன்று வரு­டங்­களில் டெங்கு நோயை நாட்­டி­லி­ருந்து முற்­றாக ஒழிக்க முடியும் என நம்­பிக்கை வெளியிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆத­ர­வணி எம்.பி.யான கனக ஹேரத் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே சுகா­தார அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 1563 பேர் டெங்கு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 2015ஆம் ஆண்டு நாடு முழு­வ­திலும் 29,777 பேர் டெங்கு நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தோடு 60 உயி­ரி­ழப்­புக்­களும் ஏற்­பட்­டி­ருந்­தன.

2014ஆம் ஆண்டு டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை 47,502 ஆக காணப்­பட்­ட­தோடு 97 உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. எனினும் கடந்த வரு­டத்தில் நாம் முன்­னெ­டுத்த டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­களால் பல பாதிப்­புக்­களை குறைக்க முடிந்­துள்­ளது.

டெங்கு நுளம்­புகள் உற்­பத்­தி­யாகும் பகு­தி­களை அடை­யாளம் கண்டு அழிக்கும் நட­வ­டிக்­கைகள் நாடு முழு­வ­திலும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மல்­லாது பாட­சா­லைகள் மற்றும் பொது மக்­க­ளுக்கு டெங்கு நோய் குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இவை வெற்­றி­ய­ளித்­தி­ருப்­ப­தா­லேயே பாதிப்பு எண்­ணிக்­கையை குறைக்க முடிந்­துள்­ளது.

டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான தடுப்­பூசி மருந்து பிரான்ஸில் கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை கொள்­வ­னவு செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பிரேசில், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்த தடுப்பூசி மருந்தையே பயன்படுத்துகின்றன. இதனை நாட்டுக்குள் கொண்டுவந்ததும் டெங்கு நோயை முற்றாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.