இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

Dhawan, Rahul, Samson and Iyer fell in quick succession as India slipped to 122 for 4.

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டி இன்று பூனேவில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

Sandakan ended with figures of 4-0-35-3.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சிகர் தவான் 52 ஓட்டங்களையும் மற்றும் கே.எல் ராஹூல் 54 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லக்ஷான் சந்தகென் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Pandey (31 off 18) and Shardul (22 off 8) helped India post 201 for 6 as the hosts scored 59 runs in the last four overs.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 57 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்ட நிலையில் சர்துல் தாகூர் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

Bumrah ended the game with figures of 2-1-5-1. He also became the highest wicket-taker for India in T20Is before the side sealed a 78-run win.

அதன்படி, மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெற்றிக் கொண்டது.