இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டி இன்றையதினம் இந்தியாவின் புனேயில் இடம்பெறுகின்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த நிலையில், இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ஓவர்கள் நிறைவில் 52 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.