எதிர்காலத்திற்காக ஏங்கும் தென்பகுதி மீனவ சமூகம் - ஒரு கள ஆய்வு - காணொளி இணைப்பு

Published By: Priyatharshan

10 Jan, 2020 | 04:07 PM
image

நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை இயற்கையாகவே பல வளங்களையும் பல்வேறு அம்சங்களையும் கொண்டமைந்தது. அத்துடன் இத் தீவில் பல இன, மத, மொழி பேசும் மக்கள் வாழுகின்ற நிலையில்,  ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்த வேண்டுமென்பதே அனைவரதும் நோக்காக காணப்படுகின்றது.

இலங்கையில் காணப்படும் இயற்கை வளங்களையும் ஏனைய அதிசயங்களையும் இலங்கையில் வாழும் மக்கள் பாதுகாப்பாகவும் அதனை அடுத்த சந்ததியினரும் உபயோகப்படுத்த வேண்டும் அல்லது அவர்களும் அதன் பயனை அனுபவிக்க வேண்டும் என்பது இலங்கையர்கள் ஒவ்வொருவரினதும் கனவாக இருக்கின்றது.

இன்னும் ஒரு சிலர் இவ்வாறானவர்களின் கனவுகளுக்கும் எண்ணங்களுக்கும் எதிர்மறையானவர்களாக காணப்படுகின்றனர். குறிப்பாக அவர்கள் நாட்டையும் , நாட்டிலுள்ள இயற்கை வளங்களையும் அதிசயங்களையும் முறைகேடாக பாவிப்பதுடன் அவற்றை அழிக்கும் விதத்திலும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு எமது தாய் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகப்பதற்கும் அதனை எமது அடுத்த சந்ததியினரும் உபயோகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சட்டங்களை அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அத்துடன் இவ்வாறான சட்டங்களை அரசாங்கம் கொண்டுவந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தும் போது எவ்வித பாரபட்சமும் பாராது வேறுபாடு இல்லாது அனைவருக்கும் ஒரே நீதியென்ற ரீதியில் அமுல்படுத்த வேண்டும்.

இந்நிலையில் இவ்வாறான சட்டங்கள் அமுல்படுத்தப்படாத நிலையில், இயற்கை வளங்கள் அழிவதால் தமது ஜீவனோபாயம் , தமது எதிர்கால தொழில் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கேள்வியும் சந்தேகமும் எழுத்துள்ள ஒரு மீனவ கிராமத்துக்கு நேரடி களவிஜயமொன்றை மேற்கொண்டோம்.

இலங்கையை சுற்றி கடல் வளம் காணப்படுவதால் பெரும்பாலான மக்களின் ஜீவனோபாயத் தொழிலாக மீன்பிடித் தொழில் காணப்படுகின்றது. அதிலும் இலங்கையின் தென்பகுதியில் பெருமளவிலான மீன்பிடிக் கிராமங்களும் மீன் பிடித்துறைமுகங்களும் அமைந்துள்ளன.

இலங்கையின் தென்பகுதியில் உள்ள மாத்தறை மாவட்டத்தில் குறிப்பாக டிக்வெல்ல, தெவிநுவர, மிரிஸ்ஸ மற்றும் நில்வெல்ல போன்ற மீன்பிடித்துறைமுகங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில் தெவிநுவர என்ற மீன்பிடிக் கிராமத்தில் அமைந்துள்ள மீன்பிடித்துறைமுகத்திற்கு களவிஜயமொன்றை மேற்கொண்டோம்.

இது மாத்தறை மாவட்டத்தில் காணப்படும் பிரதான மீன்பிடித்துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இந்த மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாளாந்தம் 1500 க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தமது ஜீவனோபாயத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

அந்தவகையில், அங்கு சென்று மீனவர்களுடன் உரையாடியதில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் கடலில் உள்ள மீன்வளம் அழிக்கப்படுவதால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் மீதான சந்தேகம் மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்துடன் தமது அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில், அங்குள் மீனவர்கள் தமது ஏங்கங்களை எம்முடன் பகிர்ந்துகொண்ட போது,

 

 

 

பிரியந்த  ( தெவிநுவர – மீனவர் )

 

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை பாவித்து மீன்பிடிப்பதை உடனடியாக தடைசெய்யவேண்டும் என்பதே எமது கோரிக்கை.

தடைசெய்யப்பட்ட வலைகளை பாவிப்பதனால் தான் மீனினங்கள் அழிவடைகின்றன.

இதனால் எமக்கு உழைத்து உணவு உண்பதற்கே வழியில்லாமல் போய்விட்டது.

இவற்றை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது ஆனால் ஒரு சிலர் அதனை தடைசெய்யவிடாது செயற்படுகின்றனர். தற்போது அவற்றை தடைசெய்ய முடியாமலுள்ளது.

இன்னும் சிறிது காலம்சென்றால் எமது பிள்ளைகளுக்கும் தொழில் இல்லாது போய்விடும் நிலையேற்படும்.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதனால் சிறிய மீன் குஞ்சுகள் இறக்க நேரிடுகின்றன. 

இதனால் எமக்கும் ஒன்றுமில்லை மீனினங்களும் அழிவடைகின்றன. இவ்வாறு சிறிய மீனனிங்கள் அழிக்கப்படுவதால் மீன்கள் பெரிதாவதற்கு சந்தர்ப்பமில்லை.

5 வருடங்களுக்கு இந்த தடைசெய்யப்பட்ட வலைகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்தால் கடல்வளம் முன்னர் இருந்ததைப்போன்று மாறிவிடும்.

இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் அரசாங்கம் தான். அரசாங்கம் மக்களின் நலன் குறித்து சிந்திப்பதாகத் தெரியவில்லை. கள்ளர்களை பிடித்து சிறையில் அடைக்கின்றனர். பின்னர் விடுதலை செய்கின்றனர் என்றார்.

 

  ராஜா -  (தெவிநுவர - மீனவர் )

 

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

கெலவல்லோ இன மீன் குஞ்சுகள் தான் அதிகம் பிடிபடுகின்றன. அவற்றை ரெஜிபோர்ம் பெட்டிகளில் போட்டு வாகனங்களில் ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். சிறிய மீன்குஞ்கள் அனைத்தும் அழிவடைந்து போகின்றன. இதனை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றார்.

 

பி.எச்.திலகரட்ண -( தெவிநுவர மீனவ சங்க - தலைவர் )

மீனவ தொழிலுக்கு அச்சுறுத்தலானதாக விளங்குகின்றது இந்த தடைசெய்யப்பட்ட வலைகளின் பாவனை. இந்த பிரச்சினைக்கு மீன்பிடித்துறை அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு தடுக்கப்படவேண்டும். 

அதன் பின்னர் அனைத்து தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழில் முறைகளும் தடுக்கப்படும்.

இவ்வாறான வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் அனைத்து வகையான சிறிய மீன்குஞ்சுகளும் அழிவடைகின்றன.

இதனால் நாளுக்குநாள் சுமார் 15 முதல் 20 கிலோ நிறையுடைய மீன்குஞ்சுகள் இறந்து கடலின் அடியில் கிடக்கின்றன.

இது யாருக்கு பிரியோசனம். இதற்கு சரியானது பாராளுமன்றில் சட்டம் இயற்றப்பட்டு அந்த சட்டத்தை கடற்படையினரிடம் நடைமுறைப்படுத்த வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மாத்திரமே இவற்றை தடைசெய்ய முடியும் என்றார்.

 

அசங்க - (தெவிநுவர மீனவர் )

 

மீனினத்தை பிடிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் நாம் நேற்றும் தொழிலுக்கு போனோம். 

சிறியவகை மீனினங்களுடன் தான் பெரிய வகை மீன்கள் செல்லும் அப்போது பெரிய மீன்களைப் பிடிப்பது இலகு.

தடைசெய்யப்பட்ட வலைகளை உடனடியாக நிறுத்துவதே சிறந்தது. அல்லது போனால் எமது குடும்பத்திற்கும் எமது பிள்ளைகளுக்கு எதிர்காலம் இல்லை.

இன்னும் ஒருவருடம் இவ்வாறு நிலைமை நீடித்தால் கடல்வளங்கள் அழிவடைந்து விடும்.

நாம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றாலும் அங்கு மீன்கள் அனைத்தும் இறந்த நிலையில் தான் காணப்படுகின்றன.

எதிர்காலத்தை கருத்தில்கொண்டு  மீன்பிடி அமைச்சு தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதுவே எமக்கு பெரும் உதவியாக இருக்கும்.

நாம் அன்றாடம் உழைத்து வாழ்க்கை நடத்துபவர்கள். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம். இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.

இவ்வாறு மீனவர்கள் சிலர் தமது கருத்துக்களை பகிரந்துகொண்டனர்.

  

இந்நிலையில் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களின் படி அங்குள்ள மீனவர்களில் ஒரு சில மீனவர்கள் இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும் இதனால் தெவிநுவர கடல் பகுதியில் உள்ள மீன் வளங்கள் அழிக்கப்படுவதாகவும் அதனால் மீனினங்கள் அழிவடையும் நிலையேற்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஒரு பகுதியினர் ஈடுபடுவதால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தையும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கொண்டுசெல்ல முடியாத நிலையில் மீனவர்கள் உள்ளனர். 

அத்துடன் தமது கடற்பரப்பில் மீனினங்கள் அழிக்கப்படுவதால் இப்பகுதியில் இருக்கும் மீனவர்கள் வேறுபகுதி கடற்பிரதேசங்களுக்கு சென்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவேண்டடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 

குறிப்பாக இப்பகுதி மீனவர்கள் திருகோணமலை கடற்பகுதிக்கு சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மீனவ சமூகங்களுக்கிடையில்  முரண்பாடுகள் தோன்றுவதற்கு வழிகோலுகின்றது. இதன் பின்னர் இவ்வாறான பிரச்சினை நாளடைவில் பூதாகரமாகி இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் முறுகல் நிலையை தோற்றுவிக்கின்றது.

உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கடல்நீரேரியில் சிறுபான்மையினத்தவர்களுக்கு உரித்தான கடற்தொழில் செய்யும் பிரதேசங்களில் பெரும்பான்மையின மீனவர்கள் சென்று அங்கும் சட்டவிரோத மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டதால் இருபகுதி மீனவர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது.

இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கைதுசெய்யப்படுகின்றபோதிலும் நாட்டின் சில பிரதேசங்களில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்பித் தொழிலில் ஈடுபடுவோர் கைதுசெய்யப்படாமலும் அதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமலும் இருப்பது இதற்கு பொறுப்பானவர்களின் அசமந்தப்போக்கை எடுத்துக்காட்டுகின்றதுடன் இவ்வாறான செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பது உரிய அதிகாரிகளின் பொறுப்பாகும்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கமும் அதற்குப் பொறுப்பான அமைச்சுக்களும் இனம் கண்டு சட்டங்களை இயற்றி தகுந்த நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே எடுக்கவேண்டும். அல்லது போனால் நாட்டில் இவ்வாறு ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் சமூக மற்றும் இனப் பிரச்சினைகளை ஏற்படுத்த மூலகாரணமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

வீ.பிரியதர்சன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22