(எம்.ஆர்.எம்.வஸீம்)
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் பதிவுசெய்யவேண்டும் என பிரதமரும் புத்தசாசன மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
புத்தசாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து இஸ்லாமிய மத்ரஸா பாடசாலைகளையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் பதிவுசெய்யவேண்டும். அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களை ஒழுங்கு முறைக்கு மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும்.
அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் தொடர்பாக முறையாக ஆராய்ந்து முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நேர்த்தியான பாடத்திட்டம் ஒன்றை ஏற்படுத்துமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM