மலையக தியாகிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு!

Published By: R. Kalaichelvan

10 Jan, 2020 | 03:58 PM
image

மலையக தியாகிகள் தினம் இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

மலையக உரிமை குரல் உட்பட சில அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரை தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் தங்கை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன், நிகழ்வின் போது, அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான 'கள்ளத்தோணி' நூல் வெளியிடப்பட்டது.

அத்தோடு, காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம், மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெற்றது.

அதன்பின்னர் மலையகத் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு உயிர்கொடுத்துவரும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மலையக உரிமை குரல் தலைவர் ராமச்சந்திரன் சனத், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், ஊடகவியலாளர்கள், தியாகிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-04-24 12:15:23
news-image

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை...

2025-04-24 12:39:48
news-image

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

2025-04-24 12:39:32
news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு...

2025-04-24 11:44:09