காலிமுகத்திடல் நடைபாதை, கடற்கரையை சூழவுள்ள பகுதிகளுக்கு சூரிய சக்தி மின் குமிழ்கள்! 

By Vishnu

10 Jan, 2020 | 03:51 PM
image

கொழும்பு காலி முகத்திடல் நடைபாதை மற்றும் கடற்கரையினை சூழவுள்ள இருளான பகுதிகளுக்கு சூரிய சக்தியை கொண்டு இயங்கும், சுற்றுபுறச் சூழலிற்கு உகந்த மின் குமிழ்களை பொறுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு  துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி,  பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

ஒரு மாத காலத்திற்குள் இவ்வாறு மின்விளக்குகளை பொறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசணை சேவைகள் நிறுவனம் இந்நடிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஒரு மாத காலத்திற்குள் நிறைவுச் செய்வதாக அமைச்சருக்கு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right