அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வடகொரிய நாட்டு ஜனாதிபதி கிம்யொங் உன்னுக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளதாக வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 'Chung Eui-Yon' நேற்று முன்தினம் 8 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பை வோஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அன்றைய தினம் கிம்யொங் உன்னின் 36 ஆவது பிறந்த தினமாகும். இந் நிலையில் அவரது பிறந்த தினத்தை நினைவில் வைத்துக் கொண்டு, கிம்யொங் உன்னுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாக கூறும்படி தனக்கு இச் சந்திப்பின்போது டொனால்ட் ட்ரம்ப் கூறியுதாகவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது 'Chung Eui-Yon' தெரிவித்தார்.

இது வெறும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியா அல்லது அதற்கும் அப்பற்ப்பட்ட எதையும் உள்ளடக்கிய செய்தியா என்று 'Chung Eui-Yon' கூறவில்லை.

வடகொரியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கும் நீண்டகால அணுசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக வட கொரியாவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு விஜயம் செய்தார்.

இதன் மூலம் எதிரியாக பார்க்கப்பட்ட வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னுடன் நட்புறவை ட்ரம்ப் ஏற்படுத்திக் கொண்டதுடன், வடகொரியாவுக்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.