உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 46 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்.முற்ற வெளிமைதானத்தில் அமைந்துள்ள நினைவு தூபிகளின் முன்பாக நடைபெற்றது.

யாழ்.மாநகர முதல்வரால் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களால் சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவிதத்தால்  11 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.