கொழும்பு, ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வீரர்களுக்கான தங்குமிட வசதி கொண்ட புதிய கட்டிடத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார நேற்றைய தினம் திறந்து வைத்தார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ஷம்மி சில்வாவின் அழைப்பின்பேரிலேயே குமார் சங்கக்கார இதனை திறந்து வைத்தார்.

அதி நவீன வசதிகள் கொண்ட இந்தக் கட்டித்தல் ஒரு நேரத்தில் 39 வீரர்கள் தங்க முடியும் என்பதுடன் பயிற்சியாளர்களுக்கும், முகாமையாளர்களுக்கும் பிரத்தியோக அறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தை தேசிய அணி வீரர்கள், இலங்கை கிரக்கெட்டின் ஏ அணியினர் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களும் பயன்படுத்தலாம்.

அத்துடன் இதுபோன்ற மேலும் ஒரு கட்டிடத்தை எதிர்காலத்தில் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கிலும் நிர்மாணிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.