தென்னாபிரிக்க விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒன்று கொங்கா குடியரசில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொங்கோ குடியரசில் கோமா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் இடப்பக்க இயந்திரம் ஒன்று தீப் பிடித்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எனினும் விரைந்து செயற்பட்ட விமான நிலையத்தின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினால் பாரிய சேத விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.

விமானம் விபத்துக்குள்ளானபோது 59 பயணி ஐ.நா.வின் படையணியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களும் இருந்துள்ளனர்.