ஈரான் மேற்கொண்ட இரு ஏவுகணை தாக்குதல் காரணமாகவே உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் ரஸ்ய தயாரிப்பான இரு ஏவுகணைகளை – எஸ் 15- பயன்படுத்தி இந்த விமானத்தை தாக்கியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் ராடார் சமிக்ஞைகள் குறிப்பிட்ட விமானத்தை இலக்குவைத்ததை அமெரிக்க அதிகாரிகள் கண்காணித்துள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டுவீழ்த்தியுள்ளது என மேற்குலக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதையே அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை எங்களதும் எங்களினது நேசநாடுகளினதும்,புலனாய்வு தகவல்கள் குறிப்பிட்ட விமானம் ஈரானின் ஏவுகணைகளால் வீழ்த்தப்ட்டுள்ளதை உறுதி செய்கின்றன என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனடா மக்கள் பதிலை எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.