வரலாற்று சிறப்பு மிக்க ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் ஆலயத்தின் மார்கழி திருவாதிரை திருவெம்பாவை உற்சவத்தின் பஞ்சஇரதோற்சவம் இன்று ஆலயத்தின் மிகவிமர்சையாக நடைபெற்றது.

இவ் உற்சவமானது கடந்த 01.01.2020 அன்று மார்கழி திருவாதிரையின் திருவெம்பாவை உற்சவம் அன்று ஆரம்பமாகிய இவ் அலங்கார உற்சவம் இன்று பஞ்சஇரதோற்சவம் காணப்படுகின்றது

இதில் விநாயகர்,முருகன் வள்ளி,தெய்வானை,நடராஐப்பெருமாள்,அம்மன்,ஆகிய தெய்வங்கள் உட்பட மாணிக்கவாசகர் பெருமாள் சமேதருக்கு விசேட அபிவிசேங்கள்,ஆராதணைகள் இடம்பெற்று அங்கு உள்வீதியுடாக வலம் வெளிவீதியில் பஞ்சஇரததோற்சவத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இஸ்ட சித்திகளை பெற்றுச்சென்றதுடன் நாளை மறுதினம் நடசேசர் ஆர்த்திரா உற்சவமும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.