பாராளுமன்ற அரசியலில் சேறுப்பூசும் கலாச்சாரத்தை இல்லாதொழித்து அரசியல் மற்றும் மக்களின் அடிப்படை    பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் நிலையான பாராளுமன்றத்தை   மீண்டும் உருவாக்க தயாராக உள்ளோம்.

நீதித்துறையில் அரசியல்வாதிகள் பிரயோகித்துள்ள அழுத்தம்  பாரதூரமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று இடம் பெற்ற பத்திரிகையாசிரியர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது  சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அரசியல்வாதிகளின் குரல் பதிவுகளின் ஊடாக  கடந்த அரசாங்கத்தில் அரசியல்வாதிகளினால் நீதித்துறைக்கு எந்தளவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகியுள்ளன.

தற்போதைய நிலமையின்  அடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என  மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். 

நீதிமன்றத்திற்கு தொடுத்துள்ள தாக்கம் பாரதூரமானது. நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையினை பாதுகாக்கும் பொறுப்பு   எமக்கு காணப்படுகின்றது.

கடந்த  அரசாங்கத்தில் எமது  தரப்பினர் ஒரு  சில  மீது   விடயங்களுக்காகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நிதியமைச்சின்   நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தற்போது விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கோடிக்கணக்கில் நிதி செலவு செய்யப்பட்டுள்ளன. ஆனால்  உரிய ஆவணங்கள் காணப்படவில்லை. ஒரு சில பிரிவுகளின் நிதி   முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம், சட்டமாதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு ஆகிய மூன்று தரப்பினரையும் உள்ளடக்கிய அழுத்தம் பிரயோகிகப்பட்டுள்ளன. இதற்கு தீர்வு கண்டு நீதிமன்றத்தினை  சுயாதீனப்படுத்த வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற தரப்பிலும் துரிதமான  நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1970ம்  ஆண்டு காலப்பகுதியில் இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் கோட்பாடுகளையும், கௌரவத்தையும் பாதுகாத்தார்கள். ஆனால்  கடந்த கால நிலவரங்களில் இந்த மதிப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பாராளுமன்றத்திற்குள் சேறுப்பூசிக் கொள்ளும் நிலமையினை  இல்லாதொழித்து மக்களுக்காக செயற்படும் நிலையான  பாராளுமன்றத்தை தோற்றுவிக்க தயாராக உள்ளோம்.