(ஆர்.விதுஷா)

மஹாபொல மாணவர் உதவி தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கோரி ஒன்றிணைந்த பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில் இடம் பெற்றது. 

இதில் 200 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டதுடன், அழகியல்கலை பல்கலைக் கழகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் ஊர்வலமாக சென்றனர்.

ஜனாதிபதி செயலகத்தை அண்டிய பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,ஆரப்பாட்ட காரர்களில் குறிப்பிட்ட சிலருக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று அவர்களது கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.