இலங்கையில் தடுப்புக்காவலில் உள்ள இந்திய மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்த அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியபோதே எஸ்.ஜெய்சங்கர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும், படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.