டியாகோ கார்சியா தீவுக்கு பதிலாக அமெரிக்கா இலங்கையை பயன்படுத்தக் கூடிய நிலைப்பாடு தோன்றும் : ரங்கே பண்டார

Published By: R. Kalaichelvan

09 Jan, 2020 | 06:27 PM
image

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக பதவிவகித்த போது அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட எக்சா ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிலமை தோன்றும் என தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார அமெரிக்கா டியாகோ கார்சியாவுக்கு பதிலாக இலங்கையை பயன்படுத்தக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்த போது பாராளுமன்றத்தில் 42 உறுப்பினர்களினர்களே இருந்தனர். ஆனால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் 97 உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்துள்ள தற்போதைய அரசாங்கம் எந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்காமல் அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கத்தின் பழிவாங்கல் செயற்பாடுகளில் எதிர்கட்சி அரசியல்வாதிகள் மாத்திரமின்றி அரச பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் இலக்குவைக்கப்பட்டுள்ளமை. அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையிலே , அரச பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரியை குறைப்பதால் பொருட்களின் விலையை குறைக்க முடியும் என்று அரசாங்கத்தரப்பினர் தெரிவித்தனர். வரி தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளது? பாடசாலை சிருடை கூப்பன்கள் பல பாடசாலைகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு பசளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்திருந்தனர். தற்போது  விவசாயிகள் பசளை இன்றி கவலைக்குள்ளாகியுள்ளனர்.

தற்போது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக  செயற்பட்ட போது அன்றைய அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக்குடன் எக்சா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

அதனால் பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. டியாகோ கார்சியாவை அமெரிக்காவுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் , இதற்கு பதிலாக இலங்கையை பயன்படுத்துவதற்கான நிலைத் தோன்றும். இதனால் மக்கள் தொடர்ந்தும் பீதியிலேயே வாழவேண்டிய நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14