உக்ரைனின் பயணிகள் விமானத்தை விமான எதிர்ப்புஏவுகணை தாக்கியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுவதாக  உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் விழுந்துநொருங்கியமைக்கான பல காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சபையின் தலைவர் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

விமானவிபத்திற்கான  பல காரணங்கள் குறித்து  ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்தை விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்கியதா என்ற கோணத்திலும் ஆராயப்படுவதாக அவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் விமானம் ஆளில்லாத விமானத்துடன் மோதியதா அல்லது வேறு ஏதாவது பொருளுடன் மோதியதா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் எனவும் விசாரணைகள் இடம்பெறும் அதேவேளை விமானத்திற்குள் குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.