(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் குளறுபடிகளினால் தற்போது தோற்றம் பெற்றுள்ள சவால்களுக்கு பொதுத்தேர்தலின் ஊடாக மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

பெரும்பான்மையுடன் கூடிய பலமான அரசாங்கத்தை அமைக்க முடியாவிடின் எதிர்காலத்தில் சவால்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன இளைஞர் சம்மேளனம் இன்று அலரி மாளிகையில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கலுத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கம் இளைஞர்களுக்கு பல்வேறு வாக்குறுதியினை வழங்கியே 2015ம் ஆண்டு ஆட்சியமைத்தது. ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டன. ஏமாற்றமடைந்த இளைஞர்கள் நவம்பர் 16ம் திகதி அப்போதைய ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படும்.
தற்போதைய சூழலுக்கு பொருத்தமாக அமையும் விடயங்கள் மாத்திரமே செயற்படுத்த முடியும் என்பதனை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும். தேவைற்ற விடயங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் கவனம் செலுத்தாது.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் குளறுபடிகளினால் இன்று முத்துறைகளிலும் மோசடிகள் ஏற்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படுபவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாத நிலைமையும் இத்திருத்தத்தினால் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கப்படும். அரசியலமைப்பின் 19வது திருத்தத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு பொதுத்தேர்தலின் ஊடாக மாத்திரமே தீர்வுக்கான முடியும்.
அனைத்து சவால்களையும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிக் கொள்ளும் உபாயோமும் தெரிவும், எழுந்துள்ள சவால்கள் வெற்றிப் பெற்றால் அதனை எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை தோற்றுவிக்கும்.
ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப் பெற்ற மக்களாணை பொதுத்தேர்தலிலும் கிடைக்கப் பெற வேண்டும். இதில் இளைஞர்களின் பங்களிப்புடி இன்றியமையாததாகும். 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த காலத்தில் இருந்து 2019.11.16ம் திகதி வரையில் வழங்கிய ஒத்துழைப்பினை அனைவரும் தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM