மட்டக்களப்பு கிரான் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்தி சென்ற மூவரை பொலிஸார் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ள தாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். 

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில்  எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 50 தேக்கு மரக்குற்றிகளையும் அதற்குப் பயன்படுத்திய 3 உழவு இயந்திரங்களையும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் தாம் கைப்பற்றியதாக வாழைச்சேனை வட்டரா வன திணைக்கள அதிகாரி எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

முறுத்தானை காட்டுப்பிரதேசத்தில் அறுக்கப்பட்ட மரக்குற்றிகளை ஓட்டமாவடி பிரதேசத்திற்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படும்போது இவை கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

நேற்று புதன் கிழமை மாலை மரக்குற்றிகளை கடத்தி வரும் வழியில் படையினர் மற்றும் வன அதிகாரிகளை அவதானித்த சந்தேக நபர்கள் உழவு இயந்திரம்,மரக்குற்றிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றினை கைவிட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தனர்.

 இந்நிலையில் இன்று சந்தேக நபர்கள் 3 பேரும் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  குறித்த வழக்கினை விசாரித்துக் கேட்டறிந்து கொண்ட வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி முகமட் பஷில் சந்தேகநபர்களை எதிர்வரும் 23.11.2020 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வாழைச்சேனை வட்டார வன அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். 

கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களான உழவு இயந்திரம்,மரக்குற்றிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றினை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.