உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளாகலாம் என விமானத்திலிருந்து தனது மனைவி முன்கூட்டியே உணர்ந்தார் என கணவர் தெரிவித்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகரிலிருந்து விமானம் புறப்படுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்னர் செய்டா சட்கூ தன்னை தொலைபேசியில் அழைத்தவேளை அவர்அச்சமடைந்தவராக காணப்பட்டார் என அவரது கணவர் தெரிவித்துள்ளார்

கனடாவில் பணிபுரியும் அவர் ஈரானில் உள்ள தனது குடும்பத்தினரை வந்துபார்த்து விட்டு மீண்டும் கனடாவிற்கு செல்வதற்காக உக்ரைன்விமானத்தில் பயணித்தவேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நான் விமானம் புறப்படுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்னர் மனைவியுடன் பேசினேன் என கனடாவில் உள்ள ஹசான் சட்கூ தெரிவித்துள்ளார்.

எனதுமனைவி ஈரான் அமெரிக்க மோதல் குறித்து கவலையடைந்திருந்தார்,யுத்தம் இடம்பெறாது என்னை நம்பிக்கையை வழங்குமாறு அவர்கேட்டுக்கொண்டார் என தெரிவித்துள்ள ஹசான் நான் எதுவும் நடக்காது என தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானத்திற்கு எதுவோ நடக்கப்போகின்றது என எனது மனைவிக்கு முன்னுணர்வுதெரிவித்துள்ளது  ,அவர் தான் பிரிந்து செல்பவர்கள் குறித்து கவலையடைந்தார்,அவர் தான் புறப்படுவதற்கு முன்னர் இன்ஸ்டகிராமில் அதனை பதிவு செய்தார் எனவும் கணவர் தெரிவித்துள்ளார்.

எனது மனைவிக்கு ஏதோ நடக்கப்போகின்றது என்பது தெரிந்திருந்தது,அவர்எழுதிய கவிதையை பாருங்கள் என தெரிவித்துள்ள கணவர் அந்த கவிதையை காண்பித்துள்ளார்.

அந்த கவிதையில் நான் புறப்படுகின்றேன் ,ஆனால் நான் கவலையடைந்துள்ளேன்,எனக்கு பின்னால் உள்ள மனிதர்கள் குறித்து நான் கவலையடைகின்றேன் என அவர்தெரிவித்துள்ளார்.