மாலியில் ரொக்கெட் தாக்குதல்!

By Vishnu

09 Jan, 2020 | 04:01 PM
image

மாலியின் வடக்கு பகுதியில் உள்ள இராணுவத் தளம்  மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியின் 18 பேர் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளதாக ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலியின் கிடல் பிராந்தியத்தில் உள்ள டெஸ்ஸாலிட் பகுதியில அமைந்துள்ள ஐ.நா., பிரான்ஸ் மற்றும் மாலியன் படைகளை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 6 அமைதி காக்கும் படையினர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் பலியானவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right