சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட முன்னாள் முசலி பிரேதச சபையின் உப தலைவர் உட்பட 5 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் - முருங்கன் மல்மத்து ஆற்றுப்பகுதியிலேயே குறித்த சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முருங்கன் பொலிஸார், வன்னி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசேட சோதனையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த சட்டவிரோத மணல் அகழ்வு நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாகவும், இதன் காரணமாக குறித்த பகுதி சூழல் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.