வட கொரியாவானது  யொங்பையொன்னிலுள்ள அணுசக்தி நிலையத்தை மீள் செயற்படுத்த ஆரம்பித்துள்ளதாக தோன்றுவதாக சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவிக்கிறது.

மேற்படி அணுசக்தி நிலையம் 2007  ஆம் ஆண்டு மூடப்பட்டிருந்த நிலையில்  அதனை மீள செயற்படுத்தியுள்ளதாக கடந்த வருடம் .வட கொரியா உரிமை கோரியிருந்தது.

சர்வதேச அணு சக்தி முகவர் நிலையம் 2009  ஆம் ஆண்டில் வட கொரியாவிலிருந்து  வெ ளியேற்றப்பட்டது முதற்கொண்டு செய்மதி படங்களின் அடிப்படையிலேயே அந்நழடு தொடர்பான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் புதிய செய்மதி புகைப்படங்கள்  அந்த அணுசக்தி நிலையத்திலுள்ள 5  மெகாவோட் பிறப்பாக்கி,  விரிவாக்க மற்றும் செறிவூட்டல் பகுதிகளில் அணுசக்தி செயற்கிரமங்களுடன் தொடர்புபட்ட செயற்பாடகள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டுவதாக உள்ளதாக  சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் தலைவர் யுகியோ அமனோ தெரிவித்தார்.