ஈரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விழுந்து நொருங்கியமைக்கு இயந்திரக்கோளாறு காரணமாகயிருக்காது என உக்ரைன் இன்டநசனல் எயர்லைன்ஸின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரான் விமானநிலையம் மிகவும் இலகுவானவொன்று .இதன் காரணமாக பல வருடங்களாக நாங்கள் விமானவோட்டிகளின் திறன் மற்றும் அவசர நிலைகளில் செயற்படக்கூடிய திறமை என்பனவற்றை மதிப்பிடுவதற்காக போயிங் ரக விமானங்கள் குறி;த்த பயிற்சிகளை பல வருடங்களாக மேற்கொண்டு வருகின்றோம் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

எங்களிற்கு கிடைத்த அறிக்கையின் படி 2400 மீற்றர் மேலே ஏறியுள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் விமானவோட்டிகளின் அனுபவம்காரணமாக தவறுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தெரிவித்துள்ளார்.

இயந்திரக்கோளாறு, விமானவோட்டிகளின் தவறுகள் இடம்பெற்றிருக்கலாம் என நாங்கள் கருதவேயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டியைஈரான் ஒப்படைக்க மறுத்து வரும் நிலையிலேயே  உக்ரைன் இன்டநசனல் எயர்லைன்ஸின் அதிகாரி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை உக்ரைன் விமானம் விழுந்து நொருங்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்தது என  ஈரானின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

விமானம் விழுந்துநொருங்கியதை பார்த்தவர்களை அடிப்படையாகவைத்து ஈரான் இதனை தெரிவித்துள்ளது.