2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கென மதிப்பீட்டு நிலையங்களாக 27 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் காலப்பகுதியில் மாத்தறை மஹாமாயா பெண்கள் வித்தியாலயம், கண்டி புனித அந்தோனி பெண்கள் கல்லூரி மற்றும் குருணாகலை சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர வித்தியாலயம் ஆகியவற்றை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.