ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் கீழ் வட மாகாணத்துக்கு 2000 பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி உதவிப் பொலிஸ் அத்தியட்சர்களும், 1400 ஆண், 400 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் வட மாகாணத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையங்களில் இடம்பெறும்.