முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் பெண்

Published By: Daya

09 Jan, 2020 | 11:17 AM
image

இங்கிலாந்தில் கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உட்கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து - டெவோன் நகரை சேர்ந்த 44 வயதான  லிசா ஆண்டர்சன் 5 குழந்தைகளுக்கு தாயான இவர்,ஒரு வினோத பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். 

குறித்த பெண்  கடந்த 15 ஆண்டுகளாக முகத்துக்கு பூசும் பவுடரை  உட்கொள்வதாகவும், இதற்காக  அதிகளவு பணத்தை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், லிசா ஆண்டர்சனுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்த பிறகே, பவுடரை உட்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் பவுடரை அவர் விரும்பி உட்கொள்ளவதாக தெரியவந்துள்ளது. 

இந்த பழக்கம் தொடங்கியதிலிருந்தது யாருக்கும் தெரியாமல் குளியலறைக்கு சென்று ரகசியமாகவே பவுடரை உட்கொண்டு வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் லிசா குடும்பத்தினருக்கே இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. ஆனால் போதைக்கு அடிமையானது போல், பவுடருக்கு அடிமையாகியுள்ளார். 

வைத்தியர்களின் உதவியை நாடியபோது இரும்பு சத்து குறைபாடு மற்றும் வேறு சில நோய் அறிகுறியால் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர். பவுடரை அளவுக்கு அதிகமாக சுவாசித்தாலோ, உட்கொண்டாலோ உடம்பிற்கு கெடுதல். புற்று நோய் கூட வர வாய்ப்புண்டு. ஆனால் லிசாவுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right