நாளை புனேயில் இடம்பெறவுள்ள இந்தியாவுடனான மூன்றாவது இருபதுக்கு : 20 போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்தியாவுடனான இரண்டாவது போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது இசுறு உதானவின் முதுகுப் பகுதியில் உண்டான வலி காரணாமகவே அவர் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு : 20 தொடரில் முதல் போட்டி கைவிடப்பட்ட, இரண்டாவது போட்டியில் இந்திய  அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

இந் நிலையில் நாளை இடம்பெறவுள்ள மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றே ஆக வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.