(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்­கி­டையில் அதி­கா­ரப்­போ­ராட்டம் ஆரம்­பித்­தி­ருப்பதை ஜனா­தி­ப­தியின் உரையில் இருந்து உணர்ந்­து­கொள்ள முடி­யு­மாக இருக்­கின்­றது. அத்­துடன் விஜே­தாச ராஜபக் ஷ முன்­வைத்­தி­ருக்கும் தனி­நபர் பிரே­ர­ணை­ தொ­டர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை அறி­விக்­க­வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன் கிழமை எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வந்த ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டன உரை மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் இரண்­டாம்நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலேna இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ் தேர்தல் மேடையில் தெரி­விக்­காத விட­ய­மொன்றை அவ­ரது அக்­கி­ரா­சன உரையில் தெரி­வித்­தி­ருந்தார். அதா­வது அர­சி­ய­ல­மைப்பின் 19ஆம் திருத்­தத்தை நீக்­கி­வி­ட­வேண்டும் என்­ப­தாகும். அதேபோல் ஜனா­தி­ப­தியின் இந்த கூற்றை, தற்­போது விஜே­தாச ராஜபக்ஷ் தனி­நபர் பிரே­ர­ணை­யாக முன்­வைத்­தி­ருக்கும் 22ஆம் திருத்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் விட­யங்­களில் இருந்து உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­ளலாம்.

விஜே­தாச ராஜ­பக்ஷ்­வினால் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் இரண்டு பிரே­ர­ணை­க­ளையும் ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொள்­கின்றார் என்­பதை அவ­ரது உரையில் இருந்து விளங்­கிக்­கொள்­ளலாம் .ஆனால் இந்த பிரே­ரணை அர­சாங்­கத்தின் பிரே­ர­ணை­யாக இருக்­கு­மாக இருந்தால் அர­சாங்கம் பிரே­ர­ணை­யாக இதனை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­ப­தி­ருக்­கலாம். தனி­நபர் பிரே­ர­ணை­யாக சமர்ப்­பித்தால் அதனை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்ள இன்னும் எவ்­வ­ளவு காலம் செல்லும் என தெரி­யாது. அதனால் இந்த பிரே­ரணை தொடர்­பாக அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை அறி­விக்­க­வேண்டும்.

பாரா­ளு­மன்ற தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை எதிர்­பார்ப்­ப­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஆனால் இந்த நாட்டின் வர­லாற்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெற்­றுக்­கொண்டு ஆட்சி செய்த அர­சாங்­கங்கள் அத­னைக்­கொண்டு நாட்­டுக்கு நன்­மை­யான எந்த வேலைத்­திட்­டத்­தையும் மேற்­கொள்­ள­வில்லை. ஐக்­கிய தேசிய கட்சி 1977இல் ஆறில் ஐந்து பெரும்­பான்­மையை பெற்­றுக்­கொண்டு 16முறை அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் மேற்­கொண்­டது. இதன் மூலம் நாட்டை அரா­ஜக நிலைக்கே கொண்­டு­சென்­றி­ருந்­தது. 

 2010இல் மஹிந்த ராஜ­பக்ஷ்­வுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை கிடைக்­கா­விட்­டாலும் வரப்­பி­ர­சா­தங்­களை வழங்கி பெரும்­பான்­மையை அமைத்­துக்­கொண்டார். அதன் மூலம் தொடர்ந்து தான் அதி­கா­ரத்தில்  இருப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையே மேற்­கொண்­டி­ருந்தார். அதனால் கோத்­தா­பய ராஜபக்ஷ் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை கோரு­வது  ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்கு அல்ல என்­பது வர­லாறு எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

 ஜனா­தி­ப­தியின் உரையில் தனது ராஜபக்ஷ் குடும்பம் தொடர்­பாக 8 நிமி­டங்கள் கதைத்தார். ராஜபக்ஷ்வினர் தொடர்பாக கதைப்பவர்கள் யாரும் மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை தெரிவிக்க மறப்பதில்லை. ஆனால் கோத்தாபய ராஜபக்ஷ் மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை ஒரு இடத்தில் கூட தெரிவிக்காமல் இருந்தது, அவர்களுக்கிடையிலான அதிகாரப்போராட்டத்தின் ஆரம்பமாகும். எதிர்காலத்தில் இன்னும் பலவிடயங்களை கண்டுகொள்ளலாம் என்றார்.