கேகாலை நகர சபைக்கு அருகே குப்பை சேகரிக்கும் இடத்தில் திடீர் தீ விபத்து சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. 

கேகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவனெல்ல பிரதேச சபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த தீ விபத்தால் எந்தவிதமான சேதங்களோ, சொத்துச் சேதங்களோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.