தமி­ழர்­களின் உணர்வை புரிந்து கொள்­ளுங்கள்: அதி­காரப்பகிர்வே முன்­னேற்­றத்­துக்கு ஒரே வழி என்­கிறார் சம்­பந்தன்

Published By: J.G.Stephan

09 Jan, 2020 | 09:36 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்..எம்.வஸீம்)

  • ஜனா­தி­பதி உண்­மை­களைப் பேசு­கிறார் 
  • பல்­லினத்தன்­மையை மதிக்­க­ வேண்டும் 
  • சர்­வ­கட்சி மாநாட்டை நினை­வு­ப­டுத்­து­கிறோம்
  • தமி­ழர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றுங்கள்

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ அர­சி­யல்­வா­தி­யாக இருக்­காத கார­ணத்­தினால்  உண்­மை­களை பேசு­கின்றார். ஆகவே அவர் சரி­யா­னதைச் செய்வார் என்ற நம்­பிக்கை உள்­ளது. எனினும் தமிழ் மக்­களின் வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள  ஜனா­தி­ப­தியால் முடி­யாமல் போன­மைக்கு தமிழ் மக்­களின் மனங்­களை வெற்­றி­கொள்ள முடி­யா­மையே கார­ண­மாகும். அதி­காரப் பர­வ­லாக்கல் மூல­மாக தமிழ் மக்­களின் மனங்­களை வெற்­றி­கொள்ள நட­வ­டிக்கை எடுத்தால் நாம் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்­குவோம் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் நேற்று   சபையில் தெரி­வித்தார். 

அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தின் மூல­மாக தீர்வு காணப்­பட வேண்டும் என்ற முயற்­சிகள் கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன, ஆனால் தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு தீர்வை காண  முடி­ய­வில்லை. எனவே இந்த புதிய அர­சாங்கம் உறு­தி­யான தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளது எனவும் அவர் வலி­யு­றுத்­தினார். 

  தமிழ் மக்­களின்   நம்­பிக்­கையை, வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்றால் அவர்­களின் உணர்­வு­களை, மொழியை கலா­சா­ரத்தை, உரி­மை­களை உணர்ந்­து­கொள்ள வேண்டும். அப்­போது அவர்­களின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு உங்­க­ளுக்கு கிடைக்கும் என்றார். 

ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டன உரை மீதான இரு நாட்கள் விவாதம் நேற்றும் பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ந்த  நிலையில் விவா­தத்தில் உரை­யாற்­றிய தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் இந்த கருத்­துக்­களை முன்­வைத்தார். 

அவர் இங்கு மேலும்  உரை­யாற்­று­கையில் 

இலங்­கையின் கேந்­தி­ரமும் தன்­மை­களும் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு பாரிய பங்­க­ளிப்பு செய்யும், இந்த விட­யங்­க­ளுக்கும் தொழில்­நுட்ப அபி­வி­ருத்­திக்கும் ஜனா­தி­பதி  அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்றார். இதில் ஏற்­று­மதி பொரு­ளா­தா­ரத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட வேண்டும். ஆசிய- ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான ஏற்­று­மதி அதி­க­ரிக்­கப்­ப­டு­வதன் மூல­மாக அதற்­கான இலக்­கினை வெகு­வாக அடைய முடியும் என நினைக்­கின்றோம். எமது நாடு பாரிய கடன் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. இதற்­கி­டையில் 25 ஆண்­டுகள் யுத்தம் ஒன்­றிற்கு  முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அர­சியல் தலை­மைகள் இதனை விரும்­பாத  போதிலும் யுத்தம் இடம்­பெற்­றது. யுத்தம் இல்­லாது போயி­ருந்தால் கடன் நெருக்­கடி வந்­தி­ருக்­காது. இப்­போ­துள்ள கடன்­களில் சில நியா­ய­மான கடன்­களும் உள்­ளன. எனினும் உள்­நாட்டு, வெளி­நாட்டு கடன்­களை நாம் அடைக்க எமது அபி­வி­ருத்­தியில்   அதிக கவனம் செலுத்த வேண்டும். 

இந்த விட­யத்தில் தேசிய வேலைத்­திட்டம் அவ­சி­ய­மாகும். சர்­வ­தேச சமூ­கத்தின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பும் அங்­கீ­கா­ரமும் பெறப்­பட வேண்டும். எனினும் கடந்த காலங்­களில் இருந்த அர­சாங்­கங்கள்  ஒரு­வரை ஒருவர் குற்றம் கூறிக்­கொண்டு நடை­மு­றை­களை கைவிட்­டன . அதேபோல் சர்­வ­தேச நிலைப்­பாட்­டையும் கருத்தில் கொள்­ள­வில்லை. இந்த நாட்டில் பல்­லின சமூ­கங்கள் வாழ்­கின்­றன . எனினும் இந்த நாட்டில் பெளத்த சிங்­கள மக்கள் பெரும்­பான்மை மக்கள் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­தில்லை. ஆனால்  ஏனைய சமூ­கங்­களும் வாழ்ந்­து­வ­ரு­கின்­றன . அவர்­களை புறக்­க­ணிக்க முடி­யாது. ஏனைய மக்­களின் கலா­சாரம், சமூக கட்­ட­மைப்பை மதிக்க வேண்டும். நீண்­ட­கா­ல­மாக இந்த கட்­ட­மைப்பு உள்­ளது. எமக்கு எவ­ரு­டனும் முரண்­பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை.  அனைத்து மக்­க­ளு­டனும் ஒன்­று­பட்ட நாட்­டுக்குள் நல்­லி­ணக்­க­மாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்­டுமே உள்­ளது. 

அந்த விட­யத்தில் நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு மிகவும்  முக்­கி­ய­மான சட்­ட­மாக கரு­தப்­ப­டு­கின்­றது. அர­சியல் அமைப்பு நகர்­வு­களில்  ஏனைய நாடு­களை எடுத்­துக்­கொண்டால் அந்த நாடு­களில் சகல மக்­களின் கருத்­துக்கள், கொள்­கைகள், உரி­மைகள் என அனைத்­தையும் உள்­ள­டக்­கிய வகையில் அனை­வரும் ஒரு இனம் என்ற அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அந்த அடை­யாளம் இருக்க வேண்டும். ஜனா­தி­ப­தியும் புதிய அர­சியல் அமைப்­பொன்றை உரு­வாக்க விரும்­பு­வ­தாக கூறி­யுள்ளார். எனவே அதுவும் இந்த முறையில் அமைய வேண்டும்.  1956 ஆம் ஆண்டு தொடக்கம் இன்­று­வரை தமிழ் மக்­களின் கோரிக்கை நிலைப்­பாடு ஒன்­றா­கவே இருந்து வரு­கின்­றது. 1983,1987 ஆம் ஆண்­டு­களில் பாரிய நெருக்­கடி ஏற்­பட்ட பின்னர் 1988ஆம் ஆண்டு 13 ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதில் தமிழ் மக்கள் ஓர­ளவு ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய திருத்தம் வந்­தது. எனினும் ஐக்­கிய இலங்­கைக்குள் இணைந்து வாழக்­கூ­டிய சூழல் ஏற்­ப­ட­வில்லை. 

அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்தின் மூல­மாக தீர்வு காணப்­பட வேண்டும் என்ற முயற்­சிகள் கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன, பல கரி­ச­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன, ஆனால் முழு­மை­யான தீர்வு ஒன்­றுக்கு வர முடி­ய­வில்லை. தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட முடி­ய­வில்லை.

எனவே இந்த புதிய அர­சாங்கம் உறு­தி­யான தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. இந்த விட­யத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால­கட்­டத்தில் பல நல்­லி­ணக்க முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.   சர்­வ­கட்சி மாநாட்டில் தீர்­வுகள் குறித்து ஆரா­யப்­பட்­டது.

அவற்றை நான் மீண்டும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன். இன்று  மஹிந்த ராஜபக் ஷவின் சகோ­த­ரரின் தலை­மையில் அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக் ஷவும் ஆட்சி அதி­கா­ரத்தில் உள்ளார். எனவே தீர்வு ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்டும். 

அதே­போன்று இந்த விட­யத்தில் சர்­வ­தேத்தின்  முக்­கி­யத்­துவம் அவ­சி­ய­மா­னது. குறிப்­பாக இந்­தியா மற்றும் சர்­வ­தேசம் இந்த நாட்டில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வர அதிக ஆர்வம் காட்­டின. அப்­போதும் மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ இரு­வரின் பங்­க­ளிப்பும் இருந்­தது. எனவே இப்­போது சர்­வ­தேச கோரிக்­கை­களை கருத்தில் கொள்ள வேண்டும்.  அதி­கார பகிர்வு குறித்து சிந்­தித்தால் மட்­டுமே அபி­வி­ருத்தி சாத்­தி­ய­மாகும்.

அபி­வி­ருத்­தியின் தன்­மையில் தமிழ் முஸ்லிம் மக்­களின் பங்­க­ளிப்பை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்றால் அதி­கார பர­வ­லாக்கல்  மற்றும் தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்ற வேண்டும்.  தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் செவி­ம­டுக்க வேண்டும். அப்­போ­துதான் சர்­வ­தேச முத­லீ­டுகள் அபி­வி­ருத்­திகள் என அனைத்­தையும் பெற்­றுக்­கொள்ள முடியும்.  

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவிற்கு கூறு­வது என்­ன­வென்றால், நீங்கள் அர­சி­யல்­வாதி அல்ல, ஆகவே நீங்கள் உண்­மையை பேசு­கின்­றீர்கள். ஆகவே நீங்கள் சரி­யா­னதை செய்­வீர்கள் என நம்­பு­கின்றோம். ஐக்­கிய இலங்­கைக்குள் நாம் ஒன்றுபட்டு செயற்பட தயாராக உள்ளோம். நாட்டின் அபிவிருத்திக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட தயாராக உள்ளோம். இது ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கலை செய்வதன் மூலமே சாத்தியமாகும். 

அது நடந்தால் நாமும் ஆதரவு வழங்க தயாரக உள்ளோம். இன்றும் தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றிகொள்ள முடியாது உள்ளது. அதற்கு நீங்கள் அவர்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாதமையே காரணமாகும்.

அவர்களின் நம்பிக்கையை, வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகளை, மொழியை கலாசாரத்தை, உரிமைகளை உணர்ந்துகொள்ள வேண்டும். அப்போது அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11