இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் தேசிய அட்டையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத பரீட்சாத்திகள் உரிய வகையில் அதனை பூர்த்தி செய்து எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை ஆட்பதிவு திணைக்களம் அமைந்துள்ள பத்தரமுல்லை பிரதான அலுவலகத்துக்கு அல்லது வடமேல், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணம் உள்ளிட்ட மாகாணங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

- அரசாங்க தகவல் திணைக்களம்