ஈரானின் தாக்குதலால் அமெரிக்க படையினர் எவரும் கொல்லப்படவில்லை- டிரம்ப்

08 Jan, 2020 | 10:40 PM
image

ஈரான் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அமெரிக்கா படையினருக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்களிற்கான விசேட உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் படையினர் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் எங்கள் படைத்தளங்களிற்கு சிறிய அளவு சேதமே ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சொலைமானி அமெரிக்காவிற்கு எதிராக புதிய தாக்குதலை திட்டமிட்டார் நாங்கள் அதனை தடுத்தோம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சொலைமானியே உலகின் பிரதானமான பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ள டிரம்ப் அவர் பயங்கரவாதிகளிற்கு பயிற்சி அளித்தார் எனவும் தெரிவித்துள்ளார்.

உலகில் எண்ணெய் மற்றும் எரிபொருள் வாயுவை உற்பத்தி முயற்சி செய்யும் பிரதான நாடு அமெரிக்கா ,நாங்கள் சுதந்திரமானவர்கள் எங்களிற்கு மத்திய கிழக்கின் எண்ணெய் அவசியமில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி உடன்படிக்கை மிகவும் பிழையானது என குறிப்பிட்டுள்ள டிரம்ப் இந்த உடன்படிக்கை ஈரானிற்கு சாதகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது அணுவாயுத முயற்சிகளை கைவிடவேண்டும் பயங்கரவாதத்திற்கு உதவுவதை கைவிடவேண்டும் எனவும் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 ஈரானுடனான உடன்படிக்கையிலிருந்து  ஏனைய நேசநாடுகளை விலகுமாறும் கோரியுள்ள டிரம்ப் உலகை பாதுகாப்பானதாக்கும் அமைதியானதாக்கும் உடன்படிக்கையை ஈரானுடன் செய்துகொள்வதற்காக நாங்கள் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரான் மக்களிற்கும் தலைவர்களிற்கும் செய்தியொன்றை தெரிவித்துள்ள டிரம்ப் உங்களிற்கு சிறந்த மிகச்சிறந்த எதிர்காலம் அமையவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம், நீங்கள் அதற்கு தகுதியானவர்கள்,என தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுபீட்சம் நிலவினால் உலகநாடுகளுடன் ஐக்கியமும் நட்பும் ஏற்படும்,அமைதியை சமாதானத்தை விரும்பும் அனைவரையும் அரவணைக்க அமெரிக்க தயாராகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45
news-image

புகையிரதத்தின் மீது பிரிவினைவாதிகளின் தாக்குதலிற்கு இந்தியா...

2025-03-14 12:53:23
news-image

டென்வர் விமானநிலையத்தில் அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில்...

2025-03-14 10:20:32
news-image

பாக்கிஸ்தானில் பணயக்கைதிகளாக பிடிபட்ட புகையிரத பயணிகளைமீட்கும்...

2025-03-13 14:40:20
news-image

போதைப்பொருளிற்கு எதிரான போரின் போது கொலைகள்...

2025-03-13 13:03:48