புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லன்கந்தல் பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபடும் நபர் ஒருவர் வெளிநாட்டுத் தயாரிப்பிலான துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து புத்தளம் பொலிஸார் குறித்த சந்தேக நபரின் வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் போது வீட்டின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.  

மணல் அகழ்வுக்காக மீஓயா ஆற்றுக்குச் சென்ற போது குவிக்கப்பட்டிருந்த மணல் குவியலுக்குள்ளிருந்து குறித்த துப்பாக்கியை தான் எடுத்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.