பாகிஸ்தான் அரசு கண்டி பதியுத்தீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு முழுமையான தகவல் தொழில் நுட்ப  ஆய்வகம் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தான் அரசின்  உயர் ஸ்தானிகராலயம் ஊடாக தொழில்நுட்ப ஆய்வகத்தினை கண்டி  பதியுத்தீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்கு உத்தியோக பூர்வமாக  வழங்கி வைக்கும் நிகழ்வு 2020 ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற்றது. 

இவ் விழாவின் போது, பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் திரு. தன்வீர் அஹ்மத், கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் அதிபருடன் இணைந்து  தகவல் தொழில் நுட்ப  ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

இதன் போது உரையாற்றிய பதில் உயர் ஸ்தானிகர்,  மக்களின் முன்னேற்றத்திற்காக இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டதுடன் சிறந்த கல்வி வாய்ப்புகளுடன் இளைய தலைமுறையினரின் தேசத்தைக் கட்டியெழுப்பும் திறனை மேம்படுத்துவதில் இலங்கைக்கு பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என தெரிவித்தார்.