அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் சோளத்தால் நிரப்பப் பட்ட தண்டவாளத் தின் புகைப்படம் இணையதளங்களில் வைலாகி வருகிறது.

கனடா பசிபிக் புகையிரதம்  அந்நாட்டின் ஆல்பெர்டா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதன் வழித்தடம் கனடாவிலிருந்து அமெரிக்காவின் சில முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சிகாகோ, நியூயோர்க் நகரங்களிலும் இந்த புகையிரத சேவை உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்கா- கனடா நாடுகளின் எல்லையையொட்டி அமைந்துள்ள அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள கிரிஸ்டல் நகரின் வழியே செல்லும் கனடா பசிபிக் ரெயில்வே வழித்தடத்தில் நேற்று சோளம் சிந்தப்பட்டு தண்டவாளம் முழுவதும் மூடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 கிட்டத்தட்ட 0.6 கிலோ மீற்றர் தூரத்திற்கு சோளத்தால் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. 

‘அவ்வழியே சென்ற சரக்கு புகையிரதத்திருந்து தானியம் சிந்தியிருக்கலாம். சிந்திய சோளத்தின் மதிப்பு 3,465 டொலர்களாகும். தண்டவாளத்தில் இருந்து சோளத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளோம்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.