புதுடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட மாணவர்களிற்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காக  நடிகை தீபிகா படுகோனிற்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட தீபிகா படுகோன் கருத்துக்கள் எதனையும் வெளியிடாத போதிலும் மாணவர்களிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்களுடன் காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன.

பலர் இது துணிச்சலான நடவடிக்கை என தீபிகா படுகோனிற்கு பாராட்டுகளை  தெரிவித்துள்ளனர்.

ஒரு படத்தினை தயாரிப்பவர் என்ற அடிப்படையில் அவர் தனது திரைப்படம் எவ்வாறுள்ளது என்பதை பார்ப்பதற்காகவும் பாராட்டுகளை செவிமடுப்பதற்காகவும் மும்பாயில் இருந்திருக்கவேண்டும் ஆனால் அவர் விளைவுகள் எவ்வாறிருக்கும் என தெரிந்திருந்தும் தாக்கப்பட்ட மாணவர்களிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் திரைப்பட தயாரிப்பாளர் நிக்கில் அத்வானி  சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு;ள்ளார். 

திரைப்படத்தயாரிப்பாளர் அனுராக் கெசாப்;பும் தீபிகா படுகோனை பாராட்டியுள்ளார்.

இதேவேளை இந்த மாணவர்களிற்கு ஆதரவளித்தமைக்காக வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள தீபிகா படுகோனின் திரைப்படத்தினை புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்துக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

பாஜக தலைவர் வெளியிட்டுள்ள புறக்கணிப்பு கோரிக்கையை பலர் கடுமையாக விமர்சித்துள்ளதுடன் தீபிகாவிற்கு தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.